ஹூண்டாய் நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட கிரேட்டா என் லைன் காரை அறிமுகம் செய்துள்ளது. ஸ்போர்ட்டியான தோற்றத்தில் முன்புற கிரில்கள், என் லைன் லோகோ, புதிய பம்பர் டிசைன், ஆர்18 அலாய் வீல்கள் கருப்பு வண்ணத்துடன் கூடிய ஓஆர்விஎம்கள் என தோற்றப்பொலிவுடன் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் 1.5 லிட்டர் டர்போ ஜிடிஐ இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் என இரண்டு வகையாக கிடைக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 160 பிஎஸ் பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
100 கி.மீ வேகத்தை 8.9 நொடிகளில் எட்டும். எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என 3 வகையான டிரைவிங் மோட்கள் உள்ளன. டிராக்ஷன் கண்ட்ரோல், 10.25 அங்குல எச்டி இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெற்றுள்ளது. 6 ஏர்பேக்குகள், 4 டிஸ்க் பிரேக், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் அசஸ்ட் உட்பட 42 வகையான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காரில் என் 8 மற்றும் என் 10 என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக என்8 மேனுவல் கியர் சுமார் ரூ.16,82,300 லட்சம் எனவும், என் 8 டிசிடி சுமார் ரூ.18,32,300 எனவும், என்10 மேனுவல் சுமார் ரூ.19,34,300 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான ஷோரூம்களுக்கு இந்த கார் அனுப்பப்பட்டு விட்டதாக நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.