ஹோண்டா நிறுவனம் சிபி350 என்ற மோட்டார் சைக்கிளை ஏற்கெனவே சந்தைப்படுத்தியுள்ளது. இது மேம்படுத்தப்பட்டு ராயல் என்பீல்டு கிளாசிக் 350க்கு நேரடிப் போட்டியாக புதிய வடிவில் வெளியாகியுள்ளது. இதில் 348 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 21 எச்பி பவரையும், 30 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் புரோ என இரண்டு வேரியண்ட்களில் உள்ளன.
துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.99 எனவும், டாப் வேரியண்ட் சுமார் ரூ.2.17 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிராக்ஷன் கன்ட்ரோல் டூயல் சானல் ஏபிஎஸ் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன.