டெல்லி : தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, மேற்குவங்க மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கையையும் விடுத்து இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.