சென்னை: திருநாவுக்கரசர் எம்.பிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளார்.