சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து கடந்த மார்ச் 5ம் தேதி ஒரு சவரன் ரூ.46,200 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு 6ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,600க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,800க்கு விற்கப்பட்டது. 7ம் தேதி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,605க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,840க்கு விற்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று, தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5,565க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.44,520க்கும் விற்கப்பட்டது. இது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.