சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 23ம் தேதி ஒரு சவரன் ரூ44,168க்கு விற்கப்பட்டது. ஞாயிற்று கிழமைக்கு பிறகு கடந்த 25ம் தேதி தங்கம் மாாக்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை கிராமுக்கு ரூ1 குறைந்து ஒரு கிராம் ரூ5,520க்கும், சவரனுக்கு ரூ8 குறைந்து ஒரு சவரன் ரூ44,160க்கும் விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் மேலும் தங்கம் விலை குறைந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ15 குறைந்து ஒரு கிராம் ரூ5,505க்கும், சவரனுக்கு ரூ120 குறைந்து ஒரு சவரன் ரூ44,040க்கும் விற்கப்பட்டது. நேற்றும் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் 5,480-க்கும், சவரன் ரூ.43,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது; சென்னையில் 22 காரட் ஆபரண ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 குறைந்து ஒரு கிராம் ரூ.4,432 ஆகவும், சவரனுக்கு ரூ.456 குறைந்து ஒரு சவரன் ரூ.35,456 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைத்து ரூ.76.50க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைத்து வருவதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.