சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்தது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. 15ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.49 ஆயிரத்துக்கும், 16ம் தேதி சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.48,920க்கும் விற்கப்பட்டது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் குறைந்து காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,090க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களில் ரூ.360 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.