சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,110க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.48,880க்கும் விற்கப்பட்டது. ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை கொஞ்சம் குறைந்தது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,135க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,080க்கும் விற்கப்பட்டது. மீண்டும் விலை அதிகரித்தது நகை வாங்குவோரை கவலையடைய செய்துள்ளது.
தங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.49,000 தாண்டியது
previous post