Saturday, July 27, 2024
Home » கோவா கப்பல் கட்டும் தளத்தில் ஜூனியர் சூபர்வைசர்

கோவா கப்பல் கட்டும் தளத்தில் ஜூனியர் சூபர்வைசர்

by Porselvi

பணியிடங்கள் விவரம்:

1. Junior Supervisor (Canteen): 1 இடம் (பொது). தகுதி: ஹோட்டல் மேனேஜ்மென்ட்/ ஹாஸ்பிட்டலிட்டி மற்றும் ஹோட்டல் நிர்வாகம் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
2. Junior Supervisor (Electrical- Safety): 1 இடம் (ஒபிசி). தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சியுடன் இன்டஸ்ட்ரியல் சேப்டியில் ஒரு வருட டிப்ளமோ தேர்ச்சியும் 2 வருட பணி அனுபவம்.
3. Assistant Superintendent (Finance): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் சிஏ தேர்ச்சி அல்லது நிதி பாடத்தில் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Assistant Superintendent (Commercial): 3 இடங்கள் (எஸ்டி). தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்/சப்ளை செயின் மேனேஜ்மென்ட் பிரிவில் ஒரு வருட டிப்ளமோ தேர்ச்சியும் 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 31.01.2024 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.21,000-70,000.

5. Nurse (Male): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 33க்குள். சம்பளம்: ரூ.16,600- 63,500. தகுதி: நர்சிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.200/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.goashipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (27.03.2024).

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi