இஞ்சித் துண்டுகள் – ஒரு கிண்ணம்
பூண்டு – 20 பல்
காய்ந்த மிளகாய் – 10
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால்
தேக்கரண்டி
வெல்லம் – சிறிய துண்டு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, அதில், சுத்தம் செய்து நறுக்கிய இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு, வெல்லம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும்.