ஜவ்வரிசி – 100 கிராம்,
ரவை – 200 கிராம்,
சர்க்கரை – 150 கிராம்,
தேங்காய் – ½ மூடி,
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். பிறகு அதை சிறிது உப்புச் சேர்த்து பிசைய வேண்டும். அத்துடன் ரவையையும் சேர்த்துக் கெட்டியாக பிசைந்துகொள்ளவும். தேங்காயை பூபோலத் துருவி, ஏலக்காய் தூள், சர்க்கரை இவற்றை ஜவ்வரிசி-ரவை கலவையுடன் சேர்த்துப் பிசையவும். அரிசி மாவு பதத்திற்கு வரும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு துண்டு வாழை இலையில் எண்ணெய் தடவி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதில் வைத்து அதிரசம் போல் தட்டி, எண்ணெயில் போடவும். அது பூரி போல உப்பி வரும். அதை திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுக்கவும். இந்த ஜவ்வரிசி அதிரசம் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். செய்யும் செலவும், நேரமும் குறைவு. இது தீபாவளிக்கு தித்திக்கும் ருசியான பட்சணம்.