Wednesday, May 29, 2024
Home » 2,143 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை

2,143 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை

by Suresh

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 2,143 ஜோடிகள் ஒரே மேடையில் இலவச திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன. ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தில் மஹாவீர் கோஷாலா கல்யாண் சன்ஸ்தான் என்ற அறக்கட்டளை மூலம், சமூக நல்லிணக்க திருமணம் நடந்தது. இந்து, முஸ்லிம் போன்ற சமூகத்தை சேர்ந்த திருமண ஜோடிகள் கலந்து கொண்டன. அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த இந்த திருமண விழாவில் 2,143 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் இலவச திருமணம் நடைபெற்றது.

புதுமணத் தம்பதிகளுக்கு நகைகள், படுக்கை, பாத்திரங்கள், டிவி, குளிர்சாதனப் பெட்டி போன்றவை பரிசாக வழங்கப்பட்டன. ஆறு மணி நேரம் நடந்த இந்த விழா, விரைவில் கின்னஸ் சாதனையில் இடம் பெறும் என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த விழாவில் திருமண சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்தும் கொடுக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

5 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi