மொனாகோ: மொனாகோவைச் சேர்ந்த பார்முலா-1 கார் பந்தய வீரர் சார்லஸ் லெக்லெர்க்கின் ஹெல்மெட் ரூ.2.72 கோடிக்கு ஏலம் போனது. மெனாகோ கிராண்ட் பிரீ போட்டியில் சார்லஸ் லெக்லெர்க் பயன்படுத்திய ஹெல்மெட் ஏலம் விடப்பட்டது. கார் பந்தய வீரரின் ஹெல்மெட் அதிக விலைக்கு ஏலம் போவது இதுவே முதல்முறையாகும். ஏலத்தொகை இத்தாலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.