மீரட்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் எம்பி சாகித் அக்லக்.பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்.இவரது மகனான டேனிஷ் அக்லக் தன்னை பலாத்காரம் செய்ததாக 24 வயது பெண் ஒருவர் மீரட் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் டேனிஷ் உடன் நட்பு ஏற்பட்டது. கடந்த 20ம் தேதி டெல்லியில் வைத்து என்னுடன் உறவு கொண்டார். இப்போது மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார். புகாரையடுத்து நேற்று டேனிஷை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் பலாத்கார புகார் மாஜி எம்பி மகன் கைது
previous post