சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவருமான திரு. கக்கன் அவர்களது மகன் மருத்துவர் சத்தியநாதன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனவருத்தம் அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.