சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய செயற்குழு கூட்டத்தில் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.