பெங்களூரு : ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்து போராட்டம் நடத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றிய அரசை கண்டித்து கர்நாடக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர். கர்நாடகாவில் இருந்து நிர்மலா சீதாராமன் எம்.பி.யாக தேர்வானதால் அவருக்கும் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், எச்.டி.தேவகவுடா, தேஜஸ்வி சூர்யா, கார்கேவுக்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.