டெல்லி: குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். நாட்டில் உள்ள ஆறுகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகளுடன் ஆலோசித்து திருத்தி அமைக்கப்படும். திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.