சேலம், நவ.11: சேலம் ஆத்தூர் அருகேயுள்ள வீரகனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன்(46). சேலம் உடையாப்பட்டியில் உள்ள மின் அலுவலகத்தில் லைன்மேனாக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் உடையாப்பட்டி தொழில்பேட்டையில் பேட்டரி கம்பெனிக்கு வரும் டிரான்ஸ்பார்மரில் பீஸ் போய் விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லைன்மேன் சவுந்தரபாண்டியன், மின்கம்பத்தில் ஏறினார். 5 அடி ஏறிய நிலையில் திடீரென மயங்கிவிழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீர் கொடுத்தனர். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.