தென்காசி: தென்காசி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும், பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். குற்றால அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறை, போலீஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.