சென்னை: அதிகாரிகளின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் கண்காணித்து, தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரி அருணை இடமாற்றம் செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கூடுதல் டிஜிபி அருணை இடமாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எஸ்.கே.சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணைய கண்காணிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி உள்ளதால் மனுதாரர் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, கடைசி நேரத்தில் காவல் அதிகாரியை இடமாற்றம் செய்யும்படி உத்தரவிட முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்தார்.
தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு
137
previous post