Saturday, June 1, 2024
Home » பண்டிகை திருவிழா காலங்களில் உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர் தகவல்

பண்டிகை திருவிழா காலங்களில் உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர் தகவல்

by Ranjith

திருவள்ளூர்: மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என கலெக்டர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது பண்டிகை காலம் தொடங்கவுள்ள தமிழ்நாட்டில், அனைத்து விதமான விற்பனைகளும் அதிகரிக்கவுள்ளது.

அதில், முக்கியமாக ஆயுத பூஜை, தீபாவளி மற்றம் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரவகைள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவுப் பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது. மேலும், தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இனிப்பு, காரவகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்கவேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. மேலும், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணையை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தகூடாது.

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுபொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டுகாலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியனவற்றை அவசியம் குறிப்பிடவேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமிதொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திட வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடி https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவுபாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு உரிமம் பெற்றுகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், உணவு தயாரிப்பாளர்கள் அனைவரும் அதற்கான பயிற்சியினை பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்பு துறையில் பதிவுபெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும்,

பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை பற்றிய விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம். மேலும், கூகுள் பிளேஸ்டோரிலிருந்து உணவுபாதுகாப்புத் துறையின் food safety consumer App-பை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம் என கலொக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi