நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், நேற்றும் முட்டை விலையில் 10 காசுகளை என்இசிசி குறைத்துள்ளது. இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை. 450 காசுகளாக என்இசிசி விலை நிர்ணயம் செய்து நேற்று மாலை அறிவித்தது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலை குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களில், முட்டை விலை 20 காசுகள் வரை குறைந்துள்ளது.