மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. புதன் கிழமை ஒரு டாலருக்கு ரூ.83.13 என்றிருந்த ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.83.15 ஆனது. கச்சா எண்ணெய் பீப்பாய் 90 டாலரை தாண்டியுள்ளதுடன் அமெரிக்க டாலர் வலுப்பெற்றதும் ரூபாய் மாற்று மதிப்பு சரிய காரணம்.