சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை? என்று பொது தீட்சிதர் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கின் விசாரணை ஜூன் 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பிரம்மோற்சவ விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?: ஐகோர்ட் கேள்வி
207