சென்னை: சென்னை மருத்துவர் ஆசிக் அலிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மனைவியை துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கணவரான மருத்துவர் ஆசிக் அலி ஆஜராகாததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வழக்கில் மருத்துவருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய காவல்துறையினர் தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.