சென்னை: திமுக ஆட்சியில் தான் அதிகளவில் சீர்த்திருத்த திருமணங்கள் நடைபெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக வழக்கறிஞர் இல்லத் திருமண விழாவில் முதல்வர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நான் மேயராக இருந்தபோது சென்னையில் 10 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே திட்ட மதிப்பீட்டை விட குறைவாகவே பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன. பெரிய பெரிய மாளிகையில் இருந்து கொண்டு பதவியில் அமர்ந்திருப்பது வீண் என தெரிவித்தார்.