திருவள்ளூர்: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தவறாக சித்தரித்து புகைப்படங்கள் வெளியிட்ட பாஜகவை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆயில்மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவரும் பொன்னேரி எம்எல்ஏ வுமான துரை சந்திரசேகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.