டெல்லி : மக்களவை தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக நாளை டெல்லியில் காங்கிரஸ் கட்சி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் பணிக்குழு கூட்டம் நாளை மாலை 6 மணி அளவில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.