கடலூர்: கடலூர் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களில் பழைய குற்றவாளிகளே அதிகளவில் இருப்பதாகவும், குற்றவாளிகள் தங்களது வீடுகளில் கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்து அதன் மூலம் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கொலை குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்த தமிழக டிஜிபி உத்தரவிட்டார்.
அதன்பேரில், கடலூர் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடலூர் தாழங்குடா மற்றும் தேவனாம்பட்டினம் பகுதிகளில் 40 வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கோணத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.