
டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஐ வழக்கில் மணிஷ் சிசோடியாவை ஏப்.27 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத்துறை வழக்கில் ஏப்.29 வரை சிசோடியாவின் நீதிமன்றக் காவலை டெல்லி நீதிமன்றம் நீட்டித்துள்ளது.