நெல்லை: நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக அந்த கட்சியின் முன்னாள் எம்பி ராமசுப்பு வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். இவரது வேட்பு மனு நேற்று பரிசீலிக்கப்பட்டது.
அப்போது அவரது வேட்பு மனுவுடன் கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளர் என்ற கடிதம் இணைக்கப்படவில்லை. இதனால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து ராமசுப்பு கூறுகையில், தொண்டர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தவே மனுத்தாக்கல் செய்தேன்,’என்றார்.