பெங்களூரு: பெங்களூருவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
‘2023 சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூறியது என்ன?, சித்தராமையா , துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் குடும்ப தலைவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வீடுகளுக்கு தலா 200 அலகு மின்சாரம் இலவசம் என்றனர். ஆனால் தற்போது காங்கிரஸ் அரசு கேரண்டி திட்டங்களுக்கு நூறாறு விதிமுறைகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சமூக வலைதளங்களில் தோசை கதை வைரலாகி வருகிறது.
அதாவது ஓட்டல்களில் தோசை இலவமாக வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, அதே நேரம் சட்னிக்கு அதிக விலை வாங்குகிறார்களாம். அது போல் காங்கிரசார் தேர்தலின் போது இலவச திட்டங்கள் நிபந்தனைகள் இன்றி கொடுக்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது விதிமுறைகளை அறிவித்து வருகின்றனர். வருமானவரி, ஜிஎஸ்டி கட்டுபவர்களுக்கு ரூ.2000 பணம் கிடைக்காது என்று முதல்வர் சித்தராமையா கூறுகிறார். காங்கிரஸ் அரசின் இந்த மோசடியை கன்னட மக்களிடம் விளக்குவேன்’ என்றார்.