போபால்: மபி காங்கிரஸ் பட்டியல் இன்று வெளியாகும் என்று கமல்நாத் தெரிவித்தார். மபி காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் நேற்று உஜ்ஜைனியில் நடந்த ராகுல் யாத்திரையில் இணைந்தார். அப்போது அவர் கூறியதாவது: 2019 மக்களவை தேர்தலில் மத்தியபிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதியை பா.ஜ கைப்பற்றியது. இந்த முறை காங்கிரஸ் கட்சி குறைந்தது 12 முதல் 13 தொகுதிகளை கைப்பற்றும்.
இன்று காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு வேட்பாளர்கள் பட்டியல் குறித்து பரிசீலனை செய்கிறது. மபியில் போட்டியிட உள்ள 15 முதல் 20 வேட்பாளர்கள் அதன்பின் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நான் பாஜவுக்கு போவதாக நீங்கள் (ஊடகங்கள்) தான் செய்திகளை பரப்பிவிட்டீர்கள். எல்லோரும் என்னிடம் கேள்விகள் கேட்கிறீர்கள். எனது மகன் நகுல்நாத் மீண்டும் சிந்த்வாரா மக்களவை தொகுதியில் போட்டியிடுவார். இவ்வாறு தெரிவித்தார்.