டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவர் அளித்த விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜோ பைடனிடம் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். டெல்லியில் குடியரசுத் தலைவர் அளித்த இரவு விருந்தின்போது ஜோ பைடனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து கைகுலுக்கினார்.