சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, மதுரவாயலை சேர்ந்த ரக்ஷன் (4) நேற்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளான் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். சிறுவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கud. சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மதுரவாயல் பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகியுள்ளது. இதனால் இப்பகுதியில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகமாக பரவி வருகிறது. எனவே, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிக்க கேட்டுக் கொள்கிறேன். அண்டை மாநிலங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, குடிநீர் வசதி இல்லாத பகுதிகளில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யவும், கழிவுநீர் சாலைகளில் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.