சென்னை: ஜல்லிக்கட்டு அமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் ஜூன்5ம் தேதி பாராட்டு விழா என தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பையடுத்து தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் சிறப்பாக வாதாடி தீர்ப்பை பெற்று தந்ததாக முதல்வருக்கு அமைப்பினர் பாராட்டு விழா நடத்தவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.