சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.35.7 கோடியில் முடிவுற்ற 34 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 4 சீர்மிகு பள்ளிக் கட்டமைப்புகள், 20 பூங்காக்கள், 5 விளையாட்டு திடல்கள், 5 ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.561.26 கோடி மதிப்பீட்டில் 14 முடிவுற்ற திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.