Thursday, May 9, 2024
Home » சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480க்கு விற்பனை

by Neethimaan

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தங்கம் கடந்த 18ம் தேதி ஒரு சவரன் ரூ.48,720க்கு விற்கப்பட்டது. 19ம் தேதி சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,080க்கு விற்பனையானது. 20ம் தேதி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,140க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.49,120க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,235க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880க்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. நேற்று தங்கம் விலை ரூ.280 குறைந்து ரூ.49,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6185க்கும், சவரன் ரூ.49,480க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

You may also like

Leave a Comment

sixteen + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi