Friday, May 31, 2024
Home » சென்னை மெட்ரோ ரயிலில் நடப்பாண்டில் ஆகஸ்டு மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணம்: மெட்ரோ இரயில் நிறுவனம் தகவல்

சென்னை மெட்ரோ ரயிலில் நடப்பாண்டில் ஆகஸ்டு மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணம்: மெட்ரோ இரயில் நிறுவனம் தகவல்

by Nithya

சென்னை: சென்னை மெட்ரோ இரயில்களில் நடப்பாண்டில் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணித்தனர் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது; நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகளும் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் 85,89,977 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 11.08.2023 அன்று 3,29,920 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2023, ஜூலை மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 31,05,583 பயணிகள் (Online QR – 2,10,744; Static QR – 1,00,766; Paper QR – 24,64,111; Paytm – 1,59,737; Whatsapp – 1,70,225), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 47,56,951 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 3,26,491 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,685 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 3,95,267 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட் மற்றும் Paytm App போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை சுத்தமாவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi