சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரஹமான் சென்னையில் அளித்த பேட்டி: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த சொத்துகளை எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி மீட்டெடுக்கும் பணியில் வக்பு வாரியம் ஈடுபடும். மேலும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான அளவிற்கு இதுவரை சொத்துகள் மீட்கப்பட்டு இருக்கின்றன. 2 நாட்களுக்கு முன்பு பட்டினப்பாக்கம் சாந்தோம் பகுதியில் உள்ள மதீனா பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஆக்கிரமிக்கப்பட்ட சொத்தை மீட்டெடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.