தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அருகே பூனாத்தனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு நிஷாந்த்குமார், பிரவீன்குமார் என்ற மகன்களும், பிரியதர்ஷினி(13) என்ற மகளும் உள்ளனர். பிரியதர்ஷினி பெரியாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலை 9 மணியளவில், மாணவி பிரியதர்ஷினி வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து, 41ம் எண் கொண்ட அரசு டவுன் பஸ்சில் பள்ளி செல்ல புறப்பட்டாள். பஸ் ஏறியபோது, எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தாள். அப்போது, பஸ்சின் பின் சக்கரம் மாணவியின் மீது ஏறியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.