புதுக்கோட்டை: நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா அளித்த பேட்டி: ஆன்மீக குருவாக விளங்கிய பங்காரு அடிகளார் மறைவு என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது கிடையாது. தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளது என்பதை குறித்து நிலைபாடு ஜனவரி மாதத்தில் விஜயகாந்த் அறிவிப்பார். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இதுவரை தெளிவு இல்லை. மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார சீர்கேடு உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த அரசு நல்லது செய்ததோ அந்த கூட்டணியில் தான் தேமுதிக இருக்கும். இதுவரை தமிழ்நாட்டிற்கு யாரும் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.