சென்னை: சென்னையில் பேருந்துகள் செல்லக்கூடிய 488 சாலைகள் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன. கடந்த 6-ம் தேதி வரை இதுவரை 28,503 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 19 முகாம்களில் 203 பேர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் சீரமைப்புப் பணிகளில் 23,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.