பொலிவியா நாட்டில் அடர் வனத்தில் கோகைன் தயாரிக்கும் ஆய்வகத்தை அந்த நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்து தீயிட்டு அழித்தனர். பொலிவியாவின் சாண்டாகுரோஸ் நகரில் உள்ள வனப்பகுதியான லாஸ்மிலோஸ் பகுதிகள் கோகைன் ஹைட்ரோகுளோரைடு போதைப்பொருள் ஆய்வகத்தில் வைத்து தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், இந்த தகவலை கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி உறுதி செய்தனர். துப்பாக்கியுடன் அங்கு சென்ற அதிகாரிகள், கோகைன் ஹைட்ரோகுளோரைடு தயாரிக்கும் ஆய்வகத்தை தீவைத்து கொளுத்தினர்.