பிஎம்டபிள்யூ நிறுவனம் சிஇ 02 என்ற எலக்ட்ரிக் டூவீலரை சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 2 கிலோ வாட் அவர் கொண்ட இரண்டு லித்தியம் அயன் பேட்டரிகள் இடம் பெற்றுள்ளன. இதனை முழுமையாக சாட்சி செய்தால் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். இதில் ஒரு பேட்டரியை கழற்றி விட்டும் பயன்படுத்தலாம். 119 கிலோ எடை கொண்ட இந்த டூவீலர் அதிகபட்சமாக மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.
இரண்டு பேட்டரியுடன் 90 கிமீ தூரம் வரை செல்லலாம். 0.9 கிலோவாட் அவர் மற்றும் 1.5 கிலோவாட் அவர் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம். சார்ஜர் மற்றும் பேட்டரி திறனுக்கு ஏற்ப, முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆகும். கீலெஸ் என்ட்ரி, ப்ளூடூத் இணைப்புடன் கூடிய 3.5. ரிவர்ஸ் மோட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.