சென்னை: மக்களவை தேர்தலையொட்டி பா.ஜ.க. – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இன்று மாலை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. பா.ஜ.க. பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இன்று மாலை ஜி.கே.வாசனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். பேச்சுவார்த்தையின்போது பா.ஜ.க. – தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி உறுதிசெய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.