சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு பாமக தலைவர் அன்புமணியிடம் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வரும் 19-ம் தேதி சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அன்புமணியை பங்கேற்க வைக்க பாஜக தீவிர முயற்சி. எந்த கூட்டணியில் சேருவது என பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.