ஆந்திரத்தில் மக்களவை, பேரவை தேர்தல்களை சந்திக்க பாஜக, தெலுங்குதேசம், ஜனசேனா கட்சிகள் கூட்டணி உடன்பாடு. 3 கட்சிகளும் உடன்பாடு செய்து கொண்டுள்ளதை கூட்டறிக்கை மூலம் தெரியப்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களில் போட்டி என ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என கூட்டறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 25 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன.