Thursday, May 16, 2024
Home » கேகேஆர் அணி அபார வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்

கேகேஆர் அணி அபார வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்

by Ranjith

கொல்கத்தா, மே 9: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கேகேஆர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட் செய்தது. பிரப்சிம்ரன், கேப்டன் தவான் இணைந்து பஞ்சாப் இன்னிங்சை தொடங்கினர். ஹர்ஷித் ராணா வேகத்தில் பிரப்சிம்ரன் (12 ரன்), பானுகா ராஜபக்ச (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, லிவிங்ஸ்டன் 15 ரன் எடுத்து வருண் சுழலில் பெவிலியன் திரும்பினார்.

தவான் – ஜிதேஷ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தது. ஜிதேஷ் 21 ரன், தவான் 57 ரன் (47 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்க, சாம் கரன் 4 ரன்னில் வெளியேறினார். ரிஷி தவான் 19 ரன் எடுத்து வருண் சுழலில் கிளீன் போல்டானார். கடைசி கட்டத்தில் ஷாருக் கான் – ஹர்பிரீத் பிரார் இணைந்து அதிரடியில் இறங்க, பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது.

ஷாருக் 21 ரன் (8 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்பிரீத் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் வருண் 3, ஹர்ஷித் 2, சுயாஷ் , நிதிஷ் ராணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய கேகேஆர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. நிதிஷ் ராணா அதிகபட்சமாக 51 ரன் (38 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். ரஸல் 42 ரன், ஜேசன் ராய் 38 ரன் எடுத்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ராகுல் சாஹர் 2 விக்கெட், நாதன் எல்லீஸ் மற்றும் ஹர்பிரீத் பிரார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi